ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன் !

0

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டஸி கதையம்சம் கொண்டதாம்

logo right

இப்படத்தில் கதையின் கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் (அறிந்தும் அறியாமலும்), பிரதீக் பாப்பர் (FOUR MORE SHOTS PLEASE), தீபக் பரம்போல் ( மஞ்சும்மல் பாய்ஸ்), என பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடிக்க உள்ளனர்.

இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார். மேலும் இப்படம் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.