அடிமனை பிரச்சனை பொதுமக்கள் பாதிப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு !
திருச்சி, திருவானை க்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்கிற பத்மநாபன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அதே பொதுமக்களுடன் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது… திருவானைக்கோவில் பகுதியில் உள்ள 2068, 2069 சர்வே எண்களில் உள்ள நிலம் அரசு புறம்போக்கு நிலமா அல்லது கோவிலுக்கு சொந்தமான நிலமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்த இடத்தினை இறுதி செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. n ஆகவே திருவா னைக்கோவில் கோவில் நிர்வாகம் சார்பாக ஸ்ரீரங்கம் சார் பதிவாளருக்கு அனுப்பிய செயல்முறை உத்தரவை ரத்து செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்களில் வசிக்கும் பொது மக்களாகிய எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களின் ஆவ ணங்களை பரிசீலனை செய்தும் கோவில், ஆவணங்களை பரிசீலனை செய்தும். எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை கிரையும் பெறுவதற்கும் விற்பதற்கும் மற்றும் பத்திரபதிவுகள் செய்வதற்கும் வழிவகை செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். இதேபோல கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு தற்பொழுது அவ்வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.