அடுத்த அதிரடி… ஒரே நாடு ஒரே தேர்தல்… குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

0

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனித் தனியே தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால் தேர்தல் செலவு மற்றும் நிர்வாக திறன் வீணடிக்கப்படுதாக கூறப்பட்டு வந்தது இதனை களைய நாடு முழுவதும் ஓரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் ,சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவது குறித்து பாஜக அரசு முன் முயற்சிகளை எடுத்து வந்தது.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இக்குழுவில் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

logo right

இதனைத்தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளை பெற்றது இக்குழு. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று சமர்பித்தது இந்தக் குழு இந்த அறிக்கையின் மீது குடியரசுத் தலைவர் எடுக்கவிருக்கும் முடிவுகளைப் பொறுத்தே 2029ம் ஆண்டு முதல், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமலுக்கு வருமா என்பது தெரியவரும். அதில் சட்டமன்றம் கலைக்கப்பட்டால் என்ன முடிவு எடுப்பது, உள்ளாட்சி தேர்தலை நூறு நாட்களுக்குள் நடத்துவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிக்கட்சிகள், ‘இதெல்லாம் இந்தியாவுக்கு ஒத்துவராது’ என விமர்சனம் செய்துவருவது தனிக்கதை இனி எல்லாம் ஜனாதிபதியின் கைகளில் அவர்தான் முடிவினை அறிவிக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.