அடுத்த வாரிசு : கொடி கட்சி வேண்டாம்டா சாமி !!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரை ‘திமிரி எழுடா’ என்ற உத்வேகமூட்டும் பாடலைப் பாட வைத்துள்ளார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்.
ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் ‘லால்சலாம்’. இதில் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஹீரோவாக நடிக்கிறார்கள். தன்யா பாலகிருஷ்ணன் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார்.
‘ஏழாம் அறிவு’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’ போன்ற சில தமிழ்ப்படங்களில் தன்யா நடித்திருக்கிறார். ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்துள்ளார். திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கின் முன் ரஜினி ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க வெடி வெடித்து கொண்டாடினர். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படம் பொருந்திய கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளனர் அதில் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.