அண்ணாமலை பாதயாத்திரை தேர்தலுக்கு உதவாது எஸ்.வி.சேகர் கமெடி !
அண்ணாமலை திருடர்களோடு பழகி பொய் சொல்ல கற்றுக்கொண் டார். தேர்தல் என்பது கூட்டணி பலம். அரசியல் அனுபவமே இல்லாத கத்துக் குட்டிதான் அண் ணாமலை. மக்களை மட்டுமில்லாமல் டில்லியில் உள்ள பாஜக மேல்மட்ட தலைவர்களையும் அவர் ஏமாற்றி வருகிறார். ஒரு நாளைக்கு ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரை அவருக்கு சுகரை குறைக்க மட்டும் உதவுமே தவிர, தேர்தலில் எந்த பலனை யும் அளிக்காது.
கொங்கு மாவட்டங்களில் பழனிசாமியை விட தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அண் ணாமலை எண்ணம். அவர் எண்ணத்தில் மண் விழும். பிரதமர் மோடியின் சாதனையை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்வதில்லை. ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற பூத் கமிட்டி முக்கியம். 70 ஆயிரம் பூத் கமிட்டி இருக்க வேண்டிய நிலையில் 10 ஆயிரம் பூத் கமிட்டிகூட இல்லாத ஒரு பலவீட்னமான நிலையில் தமிழக பாஜவை அண் ணாமலை வைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் ராமர் கோயில் விவகாரம் பாஜகவிற்கு கைகொடுக்கும். 3வது முறையாக 300 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று மோடி பிரதமராக அமர்வார். இவ்வாறு அவர் கூறினார். பார்ப்பன கட்சி பாரதிய ஜனதா என எதிர்கட்சிகள் வந்த நிலையில் அண்ணாமலை அசால்டாக முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்கிறார் இவரால் மைலாப்பூரில் கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது இவர் ஒரு காமெடி பீஸ் என கலைந்து சென்றனர் நிருபர்கள்.