அண்ணி ‘யார்’ பக்கம்.. இன்று தெரியும் ?

0

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இல்லாமல் முதன் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கப்போகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக, அதிமுகவுடன் கை குலுக்குமா அல்லது பாஜக தலைமையிலான தே.ஜ கூட்டணிக்கு போகுமா என்ற கேள்வி அந்த கட்சி தொண்டர்கள் மட்டுமல்லாது மற்ற கட்சியினருக்கும் இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் தேமுதிக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று நடத்துகிறார். 82 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் என்ன நடக் கப்போகிறது, தேமுதிக எந்தக் கூட்டணியில் எத்தனை இடங்கள் எதிர்பார்க்கிறது, அதன் நிபந்தனைகள், எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து நிர்வாகிகளிடம் பேசினால் தலை சுற்றுகிறது.

logo right

மதுரையில் 2005 செப்டம்பர் 14ல் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். கட்சியை நிறுவி 19 ஆண்டுகள் முடியப்போகிறது. 2006 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று எம் எல்ஏ ஆனார் என்பதும் 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தேமுதிக. அதில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதெல்லாம் பழைய கதை அந்த தேர்தலில் வலிமையான திமுகவை விட 6 இடங்கள் கூடுதலாக பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

அதன்பின் தேமுதிகவுக்கு சருக்கல்தான். 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தபோது ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் அமமுகவுடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் போட்டி யிட்டும் வெற்றி இல்லை. இந்த முறை அவர்கள் பலத்தை காட்டியாக வேண்டும்.பொதுச்செயலாளர் பிரேமலதா, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆக வேண்டும் அல்லது ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்கிறார்கள். விஜயகாந்த் மறைவின்போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூடிய கூட்டம், கட்சிக்கு ஏற்பட்டுள்ள அனுதாபஅலை, மக்கள் ஆதரவு ஆகியவை எங்களுக்கு சாதகமாக இருக்கிறது எனக்கணக்கு போட்டு காயை நகர்த்துகிறார்கள் ஆனால் வாக்கு வங்கி என்னமோ கேள்விக்குறி ?

அதிமுக, பாஜக என இரு கட்சிகளும் கணக்கு போடுகின்றன தேமுதிவை தங்கள் பக்கம் கொண்டுவர அவர்கள் எதிர்பார்ப்பது கள்ளக்குறிச்சி, மதுரை, சேலம், தர்மபுரி தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி என்கிறார்கள் ஆனால் கள்ளக்குறிச்சி ஐ.ஜே.கேவிற்கு என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.