அதிரடி விலை உயர்வு அந்த பத்து எக்ஸ்ட்ரா !!
டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ள முடிவின்படி, 180 மி.லி., அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூபாய் 10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூபாய் 20/- உயர்த்தப்பட்டுள்ளது. 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை 10/- உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும், 325 மி.லி., 500 மி.லி்., கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும், அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதன்முதலில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசே மது விற்கும் செயல் மிகக்கேவலமானது என கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.