அன்புமணி அறிக்கை அரசு செவி சாய்க்குமா ?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்,அதில் காவலர்கள் கண்ணியம் குறையாமல் பணியாற்று வதை உறுதி செய்ய, அவர்களுக்கு குறித்த காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அவர்களுக்கு 7 ஆண்டுகளில் தொடங்கி 20 ஆண்டுகளுக்குள் 3 பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு நினைத் தால் ஒரே அரசாணையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றலாம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றினால், 1999ம் ஆண்டில் பணியில், சேர்ந்த 1,100 பேர், 2002ல் பணியில் 2003ல் பணியில் சேர்ந்த 11 ஆயிரம் பேர் என 15 ஆயிரம் பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு கிடைக்கும். இதே எண்ணிக்கையிலானவர்களுக்கு முதல் நிலை காவலராகவும், தலைமை காவலராகவும் பதவி உயர்வு கிடைக்கும்.
எனவே, பட்ஜெட்டில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அன்பு மணியின் கோரிக்கையை அன்பாக பரிசீலனை செய்யுமா அரசு எனபது பட்ஜெட் தாக்கலின் பொழுது தெரிந்துவிடும் !.