அன்பு மகளே போய் வா இளையராஜா உருக்கம் !
இளையரா ஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணிசிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை இலங்கையில் காலமானார். இசை நிகழ்ச்சிக்காக இலங்கை சென்றிருந்த இளையராஜா, பவதாரிணி உடல் வைக்கப் பட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு சென்று மகள் உடலைப் பார்த்து கண்கலங்கினார்.
பவதாரிணியின் உடல், நேற்று மாலை விமானம் மூலம் இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே பவதாரிணியின் உடலுக்கு நடிகர்கள் சிவகுமார், விஷால், கார்த்தி, நடிகை ராதிகா, இயக்குனர் கே.பாக்யராஜ், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரசிகர்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு பத்துமணிக்கு பவதாரிணியின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனிமாவட்டம் பண்ணை புரத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.தேனி லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜா குடும்பத்துக்கு சொந் தமான தோட்டம் உள்ளது. அங்கு தான் இளையராஜா தாயார் சின்னத் தாய், மனைவி ஜீவா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. அங்கேயே பவதாரிணி உடலும் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.
பவதாரிணி மறைவுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின், இசை யமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், இமான், தமன், நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, பிரசன்னா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இளையராஜாவை ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பவதாரிணியின் மறை வுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.