அப்பாடா ஒரு வழியாக முடிவுக்கு வந்தது திமுக கூட்டணி தொகுதிப்பங்கீடு !
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவுற்கு வந்துள்ளன திமுக 21 தொகுதிகளிலும் காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளிலும் விசிக (சிதம்பரம், விழுப்புரம்) 2 கம்யூனிஸ்ட்கள் தலா 2 தொகுதிகளிலும் கொமுதேக(நாமக்கல்) மதிமுக(?) ஐ.எம்.யூ.எல்(ராமநாதபுரம்) ஆகியவை தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.
ஆகவே திமுக கூட்டணியில் மிகவும் பலமான கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படுகிறது, புதியதாக சேர்ந்த மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபாவில் அதுவும் 2025ல் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அறிவாலயத்தில் House Full போர்ட் மாட்ட வேண்டியதுதான். நாளை முதல் திமுகவின் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடக்க இருக்கிறது அதன்பின்னர்தான் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் எனத்தெரியவரும்.
புதுச்சேரி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் பாஜக காங்கிரஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.