அமைச்சர்களுக்கு மோடி அதிரடி உத்தரவு…
டில்லியில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவாதத்திற்குப்பின் முக்கியமாக பேசியதகவல் ஒன்று இப்பொழுது வெளியாகி இருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜன்மபூமியில், பால ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்ச்சி, மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், அவர்களின் கருத்துக்களையும், அமைச்சர்கள் கேட்டறிந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
அயோத்தியில் உள்ள பால ராமரை தரிசிக்க, தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, அமைச்சர்கள் யாரும், பிப்ரவரி மாதம் வரை அயோத்திக்கு செல்ல வேண்டாம். ஏனெனில் நீங்கள் சென்றால் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் ஆகவே நீங்கள் அனைவரும்மார்ச் மாதத்திற்கு பிறகு அயோத்திக்கு சென்று, பாலராமரை தரிசியுங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதேபோல பாலபிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான ஜனவரி 22ம் தேதியும் அனைத்து அமைச்சர்களும் அவரவர்கள் மாநிலத்திலேயே உள்ள ராமர் ஆலயத்தில் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.