அமைச்சர்கள் வழக்கு… ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பாரா ?
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை அவர் விசாரிப்பாரா என்ற முடிவு இன்று தெரியும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
வழக்குகளை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிக்கிறது.
நேற்று பட்டியலிடும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்த நிலையில் அவை நேற்று பட்டியலிடப்படவில்லை, இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தலைமை நீதிபதி பரிசீலனைக்கு பிறகு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு பட்டியிடப்பட்டுள்ளதா ? அல்லது ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டதால் அவர் முன்பு பட்டியலப்பட்டுள்ளதா ? என்பது இன்று தெரிய வரும்.