அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் முன்பதிவு !!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. நாளை முக்கிய அழைப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிப்பார்கள் எனத்தெரிவிக்கப்பட்டது தற்பொழுது 10 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகி பதைபதைக்க வைக்கிறது. தற்பொழுது நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் அயோத்திக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக அயோத்திக்கு நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 9 நகரங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் 34 இயக்கப்பட இருக்கின்றன, இதேபோல நாட்டின் பிறபகுதிகளில் இருந்து 66 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு, ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கியது. அயோத்திக்கு செல்லும் ரயில்கள் 22 பெட்டிகளுடன் கூடியவை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்த சம்மர் விடுமுறையை கோலகலமாக கொண்டாட அயோத்திக்கு டிக்கெட்டை போட்டுடவேண்டியதுதான்.