அயோத்தி செல்வேன் ஹர்பஜன்சிங் அதிரடி முடிவு !
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க போவதாக, ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஹர்பஜன்சிங் கூறியுள்ளதாவது…அயோத்தியில் நாளை (22ம் தேதி) நடக்கும் ராம் லல்லாவின் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா வில் நான் பங்கேற்பேன். காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நான் நிச்சயமாக செல்வேன்.
இது என்னுடைய தனி மனித நிலைப்பாடு. ஏனென்றால், நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். நான் அங்கு செல்வது பிரச்னை என்றால், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இந்த நேரத்தில் இந்த கோயில் கட்டப்படுவது நமது அதிர்ஷ்டம். எனவே, நாம் அனைவரும் ராமரிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும். நான் கண்டிப்பாக கடவுள் ராமரிடம் ஆசிர்வாதம் பெறுகிறேன்.. ராம்… ராம்…ராம்… இவ்வாறு அவர் கூறினார்.
ஹர்பஜன் சிங் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முறையான அழைப்பிதழ் வரவில்லை என்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கேஜ்ரிவால் கூறியிருந்த நிலையில் ஹர்பஜனின் இந்த கருத்து வந்துள்ளது. கும்பாபிஷேக தேதிக்குப்பிறகு மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ராமர் கோயிலுக்குச் செல்லப் பேவதாக கேஜ்ரிவால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.