அய்யாவிற்கு அதிகாரம் பொதுக்குழு வழங்கியது !!

0

தனித்து போட்டியிடக்கூடாது என எடுக்கப்பட்டுள்ள என் முடிவை ஏற்று கடுமையாக உழைக்கிறார்கள். எனவே, வெற்றி இலக்கை அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓராண்டாக பாமகவினர் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அடையாளம் கண்ட 12 தோகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. மற்ற கட்சிகளை விட, நாம் முன்னணியில் இருக்கிறோம்.

பாமகவினர் முதலில் குடும்பத்தை கவனியுங்கள். அவர்களுக்கு சோறு போடுங்கள். அதற்கு ஏதாவது ஒரு தொழில் செய்யுங்கள். அதன்பிறகு கட்சி வளச்சிக்கு பாடுபடுங்கள். ஆனால், 6 மாதமாக குடும்பத்தை, தொழிலை மறந்து முழு நேரமும் கட்சி வேலையை செய்கிறீர்கள். வெற்றிக்காக சபதம் ஏற்றிருக்கிறீர்கள்.

தேர்தலில் வெற்றி பெற முதலில் நம்மிடம் ஒற்றுமை தேவை. கோஷ்டியாக பிரிந்து போட்டி போட்டு வேலை செய் கிறார்கள். அதுதான் போட்டி மனப்பான்மை. சங்கம் தொடங்கியபோது நான்தான் கீழ்நிலை நிர்வாகிகளை தேடிச்சென்றேன். இப்போதுள்ள நிர்வாகிகள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு விசாலமான மனம் வேண்டும். எல்லா நிர்வாகிகளும் மனசாட்சிக்கு அஞ்சி நடக்க வேண்டும். நிர்வாகிகளுடன் நான்தொடர்ந்து உரையாடி வருகிறேன். பாமகவில் கோஷ்டி பூசல் இருக்கிறது.

logo right

தேர்தலில் வெற்றி பெற முதலில் நம்மிடம் ஒற்றுமை தேவை.கோஷ்டியாக பிரிந்து போட்டி போட்டு வேலை செய் கிறார்கள். அதுதான் போட்டி மனப்பான்மை கூடாது.

சங்கம் தொடங்கியபோது நான்தான் கீழ்நிலை நிர்வாகிகளை தேடிச்சென்றேன். இப்போதுள்ள நிர்வாகிகள் இதை மனதில் கொள்ள வேண்டும். உங்களுக்கு விசாலமான மனம் வேண்டும். எல்லா நிர்வாகிகளும் மனசாட் சிக்கு அஞ்சி நடக்க வேண்டும். நிர்வாகிகளுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன். பாமக வில் கோஷ்டி பூசல் இருக்கக் இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

இதையடுத்து, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். நாடாளுமன்ற தேர்தலில் பாமக வலிமையாக இருந்ததால்தான் வெற்றி பெற முடியும் 108 உட்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வரமுடிந்தது. நாடாளுமன்றத்தில் பாமகவுக்கு எம்பிக்கள் இல்லாதபோது எல்லாம் சமூக நீதிக்கும், தமிழக நலன்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வந்திருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் வெற்றிதான் தமிழகத்தின் நன்மை. எனவே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து செயல்பட்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக, தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட் டணி அமைத்து போட்டியிட பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தீர்மானிக்கிறது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி நிறுவனர் ராமதாசுக்கு இந்த பொதுக்குழு வழங்குகிறது. இவ்வாறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.