அரசருக்கு அல்வா ! மகனுக்கு மகுடம் !!
திமுக. கூட்டணியில் உள்ள மதிமுக, வரும் லோக்சபா தேர்தலில் எத்தனை மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காரணம், வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு இந்த முறை சீட் கொடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கான வேலைகளில் வைகோ தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இதுபற்றி மதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம் தொடர்ந்து திருச்சியையே வலம் வந்து கொண்டிருக்கிறாரே அதைவிட என்ன வேண்டும் என்றார்கள். திருச்சி அல்லது விருதுநகர் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு தொகுதி. மதிமுகவுக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு திமுக வட்டாரத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் இந்த இரு தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. திருச்சியில் திருநாவுக்கரசருக்கும், விருதுநகளில் மாணிக் தாக்கூரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆகவே, இந்த தொகுதிகளில் கை வைப்பதை தமிழக காங்கிரஸ் கட்சி கடுப்பில் இருக்கிறதாம். மாணிக் தாக்கூர் விருது நகர் தொகுதியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் இல்லை. தன்னுடைய தொகுதியை தக்கவைப் பதற்காக டில்லியில் கட்சியின் மேலிடம். வரை பேசிக் கொண்டிருக்கிறார். அதேபோல் திருச்சி தொகுதி மதிமு கவுக்கு என்ற பேச்சு. அங்கு சிட்டிங் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசரை கோபத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள். கட்சி தலைமையிடம் இருந்து பாசிட்டிவ் சிக்னல் யாருக்கு கிடைக்கும் என பட்டிமன்றம் ஒரு புறம் நடந்து வரும் சூழ்நிலையில் கடந்த முறையே அரசர் ஆளும் மீசை அமைச்சரை அப்செட் ஆக்கி இருக்கிறார். மொத்தத்தில் மதிமுகவால் காங்கிரஸ் கட்சிக்குள் களேபரம் ஆகிவருகிறது. இது ஒருபுறம் இருக்க மகனை கரையேற்ற வேண்டும் என்பதால் பக்கத்து மாவட்டத்துக்கு வேலை செய்தால் தன்னுடைய சீட் சின்னபின்னமாகிவிடும் என்கிறாராம் அரசர், அடிக்கடி நேரு ஒரு பொன்மொழியை சொல்வார் ’குச்சி மிட்டாய் யாருக்கு குல்பி ஐஸ் யாருக்கு’ என்பது இன்னும் சில நாட்களில் அந்த உண்மை தெரிந்துவிடும்.