அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை…
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூதத் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து மஹா தீபாராதனை நடைபெற்றது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பல்வேறு விதமான வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷத்தன்று அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம்,
அதன்படி நேற்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.