அரோகரா ! கெட்டுப்போன பஞ்சாமிர்தம் அரோகரா !!

0

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நேற்று அடிவாரம் பகுதியில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு, முறுக்கு, அதிரசம், உள்ளிட்ட பொருட்கள் உலகப்பிரசித்திப்பெற்றது, ஆனால் இப்பொழுது உலகம் முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது ஆம், கெட்டுப்போய் உள்ளதாகவும், பூசனம் பிடித்தும் இருந்ததாகவும் ,பஞ்சாமிர்தம் குறிபிட்ட தேதியில் முடிந்த விற்பனை செய்யபட்டதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் கோவில் இணை ஆணையர் பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையங்களில் நேற்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டனர்.

logo right

அதனை தொடர்ந்து திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது தலைவர் சந்திரமோகன் தெரிவித்ததாவது…பழனி கோவிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய அச்சிடபட்டுள்ள தேதியில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம், லட்டு ,அதிரசம் ,முறுக்கு ஆகியவதை பயன்படுத்தும் பிரசாதங்கள் தயாரித்தவுடன் பேக்கிங் செய்யும் முன் உலர வைத்து பேங்கிங் செய்யவும். , அதற்கான உலரவைக்கும் இயந்திரம் வாங்கபட்டு பயன்படுத்தபடும் , அதே போல முறுக்கு, லட்டு, அதிரசம் பிரசாதங்களுக்கு தயாரிப்பு தேதி ,காலாவதி தேதி அச்சிடப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , பக்தர்களின் வருகையை கணிக்க முடியவில்லை என்றும் அதற்காக தேதியை வைத்து தயாரிப்பு செய்து வருகிறோம், காலாவதியான எந்த பஞ்சாமிர்தம் இருப்பில் இல்லை என்றும் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் பஞ்சாமிர்தம் அனைத்தும் பில் வழங்கபடும்,வருமான நோக்கத்துடன் கோவில் நிர்வாகம் செயல்படவில்லை சேவை நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.