அலேக் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !

0

தமிழக அரசு நேற்று சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது, இதுகுறித்து தமிழக அரசு தலைமைச் செயலாள்ர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. தமிழக அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் செல்வராஜ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய செயலாளராக வேளாண்துறை கமிஷனராக இருந்த டாக்டர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.வேளாண்துறை கமிஷனர் எல் சுப்பிரமணியன் மாற்றப்பட்டு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக செல்வராஜ்க்கு பதிலாக நியமிக்கப் பட்டுள்ளார்.

logo right

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றப்பட்டு, சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை செயலாளராக எஸ்.ஜே.சிருவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாகத்துறை கமிஷனர் எஸ். நாகராஜன் மாற்றப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மனிதவள மேலாண்மைத்துறை செயலர் பொறுப்பையும் முழு கூடுதலாக இவரே கவனிப்பார். இந்த துறையை ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் கூடுதலாக கவனித்து வந்தார்.

மீன்வளத்துறை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் கே.எஸ். பழனிசாமி மாற்றப்பட்டு, நில நிர்வாக கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை செயலராக இருந்த எஸ்.ஜே.சிரு, மீன்வளத்துறை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் செல்வராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் இரண்டின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட் டுள்ளார். மேலும், சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்ட இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்புடன் இவரே கவனிப்பார். இவ்வாறு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.