அள்ளினார் அம்பானி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி !!

0

இந்தியாவின் முன்னணி தொழிற் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் தொழிற்குழுமத்தை, முகேஷ் அம்பானி நிர்வகிக்கிறார். இந்தத்துறை முழுக்க முழுக்க பெட்ரோ, கெமிக்கல் தொழிலில் இந்தியாவின் மிகப் பெரிய துறைகளில் ஒன்றாக இருக்கிறது, மேலும் பெட்ரோ கெமிக்கல் தவிர ஜியோ வழியாக தொலைத் தொடர்பு, ஜியோ டிஜிட்டல் வழியாக எலக்ட்ரானிக்ஸ், மற்றும் ரிலையன்ஸ் பஜார் வழியாக சில்லறை சந்தை விற்பனையில் ரிலையன்ஸ் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் 20 லட்சம் கோடி ரூபாயை சந்தை மதிப்பைக் கொண்ட மிகப்பெரிய தொழில் சாம்ப் ராஜ்யம் என்ற இலக்கை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேற்று எட்டியுள்ளது.

logo right

இதனால், பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு பங்குக்கு 2 ஆயிரத்து 957 ரூபாய் என்ற உச்சம் தொட்டன.

நேற்று காலை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கிய தும் 2 ஆயிரத்து 911 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விற்பனை தொடங்கி, 2 ஆயிரத்து 924 ரூபாய்க்கு மெல்ல மெல்ல உயரத் தொடங்கின. கடந்த 2 வார கால பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் குழுமம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு சந்தை மதிப்பு உயர்வை சந்தித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரிலையன்ஸ் பங்குகள் விலை 0.13 சதவிகிதம் உயர்ந்து ரூபாய்2,966.10 க்கு வர்த்தகமாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.