அவதூறுப்பேச்சு ஆ. ராசா உருவ படம் எரிப்பு !போராட்டக்காரர்கள் கைது !!
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் இவர் வ.உ.சி மற்றும் எம் ஜி ஆர் உள்ளிட்ட தலைவர்களை தொடர்ந்து தரைக்குறைவாக விமர்சித்து வருவதாக கூறி வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சங்கம் சார்பில் தலைவர் ஹரி ஹாரூன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் வ.உ.சி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100 மேற்பட்ட வெள்ளாளர் சமூகத்தினர் கலந்து கொண்டு ஆ.ராசாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் மேலும் ஆக்ரோஷமான அவர்கள் ஆ. ராசாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆ.ராசாவை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர், மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்பாட்டம் காரணமாக நீதிமன்றம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.