ஆரணியில் அண்ணாமலைக்கு சவால்விட்ட கலைராஜன் !
ஆரணியில் நடைபெற்ற திமுக தலைவர் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை பட்ஜெட் விளக்க பொதுகூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை நின்று டெபாசிட் பெற்றால் அரசியல் விட்டு விலகின்றேன் என திமுக தலைமை கழக பேச்சாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.பி.கலைராஜன் சவால்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை பட்ஜெட் விளக்க பொதுகூட்டம் திருவண்ணமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏவும் தலைமை கழக பேச்சாளருமான வி.பி.கலைராஜன் பங்கேற்றார். முன்னதாக பொதுகூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு நீண்ட வரிசையில் நிற்கவைத்து கடந்த 10ஆண்டுகளாக பாரத பிரதமர் செயல்படாமல் வாயால் வடை சுட்டு வருவதாக கூறி திமுக தொகுதி பொறுப்பாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் பெண்களுக்கு வடை மற்றும் திமுக துண்டு பிரசுரத்தை வழங்கினார்கள்.
பின்னர் வி.பி.கலைராஜன் பேசியாதாவது… பிரதமர் மோடி தமிழகத்தில் 9கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். ஆனால் 9 இல்லை 9ஆயிரம் கூட்டங்களில் பங்கேற்றாலும் தமிழகத்தில் பாஜக ஓரு தொகுதியிலும் கூட டெபாசிட் கிடைக்காது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை ஓரு தொகுதியில் போட்டியிட்டு நின்று டெபாசிட் பெற்றால் நான் அரசியலில் இருந்தே விலகி கொள்கின்றேன் என சவால் விட்டு கூறுகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இருந்த குசும்பு பிடித்த மூத்த நிருபவர் ஒருவர் இவருக்கென்ன அதிமுக அமுமுக திமுக என கட்சி மாறிக்கொண்டே இருப்பார் ஆனால் அவருக்குனு ஒரு கொள்கை இருக்கு தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் அதுவே போதும் என கூறிவிட்டு சென்றார்.