ஆர்பிஐ அதிரடி… பே-டிஎம் பேமென்ட் வங்கிக்கு தடை !

0

புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என்று பேடிஎம் மேமென்ட்ஸ் வங்கிக்கு 2022 மார்ச் 11ம் தேதி உத்தரவிடப்பட்டது. எனினும், 1949ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமலும், மீறியும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி செயல்பட்டு வந்தது என்று தணிக்கைகள் மற்றும் ஆய்வுகளில் தெரியவந்தது.

logo right

எனவே, வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 35ஏ விதிமுறையின்கீழ், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, பிரீபெய்டு கணக்கு, பாஸ் டாக், என்சிஎம்சி கார்டு ஆகியவற்றில் டெபாசிட், கிரடிட், டாப்அப் என எந்தவித பரிவர்த்தனையும் செய்யக்கூடாது. எனினும், வாடிக்கையாளர்களுக்கு வட்டி, கேஷ்பேக், ரீபண்ட் வழங்கலாம் எனத்தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ஐஎம்பிஎஸ் போன்ற யுபிஐ பரிமாற்றம் செய்ய அனுமதி கிடையாது .ஏற்கனவே நிலுவையில் இருக்கும் பரிமாற்றத்தை முடிக்க மார்ச் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். எனினும், கணக்குகளில் மீதமிருக்கும் தொகையை வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இப்பங்குகளில் இன்றைக்கு வீழ்ச்சி ஏற்படலாம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

Leave A Reply

Your email address will not be published.