ஆர்ப்பாட்டத்தில் குதித்த அய்யாக்கண்ணு…
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மோடியை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த மோடிக்கு எதிராக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்பு கொடி காட்ட இருந்த நிலையில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் அந்த வழியாக சென்ற பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் இந்த ஆளு விவசாயம் செய்ததைவிட ஆர்ப்பாட்டம் போராட்டம் என எப்ப பார்த்தாலும் நமக்கு தொல்லை தருவதையே வழக்கமாக வைத்திருக்கிறார் என புலம்பியபடி சென்றனர் வாகன ஓட்டிகள்.