ஆளுநர் பராக்… பராக்… அலறும் காவல்துறை !!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆண்டவன் கல்லூரி 2003ம் ஆண்டில் டில்லி மான்யக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது, கல்வியாளர்கள், தொழிலதிபர்களை உள்ளடக்கிய அறிவியல் அறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட ஸ்ரீ ரங்கநாத பாதுகா வித்யாலயா அறக்கட்டளையால் இக்கல்லூரி நிர்வகிக்கப்படுகிறது.
இன்று நடக்கும் இக்கல்லுாரியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார் இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் வெங்கடேஷ். முதல்வர் பிச்சைமணி உட்பட கல்லூரி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்
நூற்றாண்டு பெருமை கொண்ட திருச்சி தேசியகல்லூரியில் நடக்கும் சர்வதேச விளையாட்டு கருத்தரங்கு நிறைவு விழாவிலும் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார். ஒலிம்பியன் பாஸ்கரன். கல்லூரி செயலாளர் ரகுநாதன் எக்ஸல் சேர்மன் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஆளுநர் எங்கே சென்றாலும் அரசியல் செய்வதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவதையும் திமுக கூட்டணி கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளது, அதுவும் இந்த இரண்டு கல்லூரிகளும் அய்யர்களால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகள் ஆகவே ஆண்டவா நல்லபடியாக ஆளுநர் நிகழ்ச்சி முடிந்து செல்ல வேண்டும் என அந்த அரங்கநாதனை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.