இசையில் நூறு மதிப்பெண்கள் எப்பொழுதும் எடுப்பவர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் தான் – மிஷ்கின்
ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால் என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான டெவில் பிப்ரவரி 2ல் வெளியாகிறது. சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டெவில். இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால் என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான டெவில் பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் விதார்த் பேசும் போது, மிஷ்கின் சாருக்கு பெரிய நன்றி. சித்திரம் பேசுதடி படத்தின் வெற்றிக்குப் பின்னர் நான் கூத்துப் பட்டறையில் இருந்து கால் செய்து வாழ்த்து தெரிவித்தேன்… அப்பொழுது இருந்து எப்பொழுதும் அவர் என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். இருக்கிறார். அது இன்று வரை மாறாமல் தொடர்கிறது. அவருடன் அல்லது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்த மிஷ்கின் சாருக்கு நன்றி. என்னை மிக அழகாக திரையில் காட்டிய ஒளிப்பதிவாளர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி. ஜன்னலோரம் படத்தில் ஏற்கனவே பூர்ணாவுடன் நடித்திருக்கிறேன்.
படத்தின் இயக்குநர் ஆதித்யா பேசும் பொழுது… வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள், மாதா பிதா குரு தெய்வம், என்பார்கள். படத்தின் மீதான ஆர்வத்தையும் துடிப்பையும், அதன் மீது இருக்க வேண்டிய நேர்மையையும் என் குருநாதர் மிஷ்கின் சாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. அவருக்கு அடுத்ததாக இன்று வரை என்னை சவரக்கத்தி படத்தின் இயக்குநராக அறிய வைத்தது பத்திரிக்கை நண்பர்களின் எழுத்துதான்,அவர்களுக்கு நன்றி என்றார்.
பூர்ணா அவர்கள் என்னுடைய எல்லா படங்களில் இருக்கிறார். அவர்களுக்கு நன்றி. பூர்ணா ஒரு நடிப்புப் பேய்.. ஸ்கார்ஸி படங்களில் எப்படி டி நீரோ இருக்கிறாரோ அது போல், என் படங்களில் எப்போதும் அவர் இருப்பார். நீதி தவறப்படும் போது வாழ்க்கை சிக்கலாகும் என்பதை விதார்த்தின் கதாபாத்திரம் பேசும். ஷார்மிங் ஹீரோ அருணுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசும் பொழுது, இப்படத்தினை வழங்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் சார், என்னிடம் முதன் முதலில் கேட்டார். பின்னர் ஸ்ரீகாந்த் அவர்களின் வற்புறுத்தலால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்… சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். நான் உதவி இயக்குநாக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.
ஆதித்யா, பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்தப் பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குநாக சேர்த்துக் கொண்டேன்.. இந்த வாழ்க்கையில் வெற்றி என்பது ஒன்றுமே இல்லை, அது போல் தான் தோல்வியும் ஒன்றுமே இல்லை. இந்த வாழ்க்கையில் நீங்கள் பெரிதாய் எதும் செய்துவிட முடியாது. சாமான்ய மனிதன் தன் குடும்ப உறவினர்களுக்காக உழைக்கிறான்… இன்னும் வெகு சில மனிதர்கள் இந்த உலக மக்களுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் வெகு சிலரே… அது எல்லாராலும் முடியாது. ஒரு படத்தை நீங்கள் உண்மையாக எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள், சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான் திரைப்படத்திற்கான உயிர். நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன்.
விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் landscape இருக்கிறது என்றதுடன்
இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்…பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் டெவில் திரைப்படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள். நன்றாக இல்லை என்றால் ஆதரவு கொடுக்க வேண்டாம். தம்பி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்… நன்றாக இல்லை என்றால், ஓடாது… பரவாயில்லை என்றார்.