இண்டியா கூட்டணியில் புரிதல் இருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜா பேட்டி…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது…nஉண்மையிலேயே ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. பல்வேறு அடிப்படை நிலைகளை இலக்கணப்படுத்தி இருக்கிறது. எப்போதும், இந்தியா மத சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடாக திகழ வேண்டும், என்று தான் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் விரும்பினர். மதச் சார்பு நாடகா மாறி விடக்கூடாது, என்று தான் அரசியல் சட்டத்தை உருவாக்கிய போது அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால், பாரதிய ஜனதா கட்சி தலைமையில், ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்பாட்டில் உள்ள மோடி அரசு, இந்தியாவில், மத சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற அடிப்படையை தகர்த்து வருகிறது. மோடியின் உறுதி மொழியாக கண்டதை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், கடந்த காலத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் மோடியால் நிறைவேற்ற முடியவில்லை. நிறைவேற்றத் தவறி இருக்கிறார்.
இந்தியா பொருளாதாரம், அரசியல் போன்ற பன்முக நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால், உலக அரங்கில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியிருக்கிறது, என்று மோடி சொல்கிறார். நடைமுறையில் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் ஆட்சியாக மாறி இருக்கிறது. அதானி, அம்பானி போன்றவர்களின் கொள்ளைக்கு துணை போகும் அரசாகத் தான் உள்ளது.nஅதனால், பார்லிமென்ட் செயல் இழந்து போய் இருக்கிறது. 140க்கும் அதிகமான எம்.பி.,க்கள் நீக்கப்பட்டு, பார்லிமெண்ட் நிலைகுலைந்து இருக்கிறது. அதுவே ஜனநாயகத்தின் அழிவாகி விடும். அரசாங்கத்தின் செயல்களை விமர்சிக்கும் மேடையாக, பார்லிமென்டை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த வேண்டும், என்று அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.nபாராளுமன்றம் செயல்பட வில்லை என்றால், ஜனநாயகம் சாகிறது என்று பொருள். இதைத்தான் ஜெர்மனி போன்ற நாடுகளில் பார்த்துள்ளோம்.
இந்தியாவிலும் அது போன்ற நிலை ஏற்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவும், இந்திய ஜனநாயகமும், அரசியல் சட்டமும் காப்பாற்றப்பட வேண்டும். இந்த நோக்கங்களோடு தேர்தலை எதிர்க்கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. நாடு தழுவிய முழக்கமாக மாறியிருக்கும் இதைத் தான், ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளும் சொல்கின்றன. இந்த கூட்டணி வலுவடைந்து வருவதால், பா.ஜவிற்கும் மோடிக்கும் அச்சம் ஏற்படுகிறது. மக்களுக்கு கிடைத்த அனுபவங்கள் வாயிலாகவே, மோடி ஆட்சி, நாசகரமான ஆட்சி என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.என்றவர், பல்வேறு அரசியல் கட்டங்களை கடந்து வந்துள்ள மக்கள், இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.nஅனைத்து மாநிலங்களிலும் அரசியல் சூழல் ஒரே மாதிரியாக இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. சிறு சிறு சிக்கல்கள் இருப்பதை, பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் மாறுபாடு இருக்கிறது. அதே சமயம், இந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்குள், பா.ஜ.கவை வீழ்த்தி, நாட்டை காப்பாற்ற வேண்டும், என்ற புரிதல் இருக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதை விடுத்து, ஒரு நாடு, ஒரே தேர்தல் என்பது, மக்களை திசை திருப்பும் செயல். மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதற்கு கருவிகளாக ‘கவர்னர்’ பதவியை பயன்படுத்துகின்றனர். அவர்களும், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ்.,சின் கையாட்களாக செயல்படுகின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.