இந்தியர்களுக்கு விசா தேவையில்லாத நாடுகள் !

0

இந்தியர்களுக்கு விசா இல்லாத நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்போது மேலும் இரு நாடுகளும் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதித்துள்ளன. சமீபத்தில் மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது கென்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இந்தியர்களுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதித்துள்ளன. அதாவது, இனி இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுடன் கென்யா மற்றும் ஈரானுக்கு செல்லலாம். இந்தியர்களுக்கு சமீபத்தில் மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு மிகவும் வசதியாக பல நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கின்றன. பாஸ்போர்ட் குறியீட்டில், உலகளவில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1.அங்கோலா

2.பார்படாஸ்

3.பூடான்

4.பொலிவியா

5.பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்

6.புரூண்டி

7.கம்போடியா,

8.கேப் வெர்டே தீவுகள்

9.கொமோரோ தீவுகள்

10.கூக் தீவுகள்

11.டிஜிபவுட்டி

12.டொமினிகா

13.எல் சால்வடார்,

14.எத்தியோப்பியா

15.பிஜி

16.கபோன்

17.கிரீனடா

18.கினியா பிசாவு

19.ஹைதி

20.இந்தோனேஷியா,

21.ஈரான்

22.ஜமைக்கா

23.ஜோர்டான்

24.கஜகஸ்தான்

25.கென்யா

26.கிரிபாட்டி

27.லாவோஸ்

28.மகாவு

29.மடகாஸ்கர்,

30. மலேசியா,

31.மாலத்தீவுகள்

32.மார்ஷல் தீவுகள்

33.மொரிஷியானா

logo right

34.மொரிஷியஸ்

35. மைக்ரோனேஷியா,

36.மான்ட்செரட்

37.மொசம்பிக்

38.மியான்மர்

39.நேபாளம்

40.நையூ ,

41.ஓமன்

42.பலாவு தீவுகள்

43.கத்தார்

44.ருவாண்டா

45.சமோவா,

என்ன மூச்சு முட்டுதா இன்னும் இருக்கு இருங்க !

46.செனகல்

47.சீசெல்ஸ்

48.சியாரா லியோன்

49.சோமாலியா

50.இலங்கை,

51.செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

52.செயின்ட்லூசியா

53.செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்,

54.தான்சானியா

55.தாய்லாந்து

56.தைமூர்

57.டோகோ

58.டிரினாட் மற்றும் டோபாகோ,

59.துனிஷியா

60.துவாலு

61.வானூட்டு தீவு

62.ஜிம்பாப்வே

ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம் வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்கிறார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள். இந்த பட்டியலில் வியட்நாமும் விரைவில் இணையும்.

கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ ஜனவரி 2024 முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவித்தார்.

இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான விசா தேவையையும் ஈரான் தள்ளுபடி செய்தது. ஆன்லைன் தளங்கள் விசா செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்தியுள்ளன என்பதை ஜனாதிபதி ரூட்டோ எடுத்துக்காட்டியுள்ளார்.

இது முன்பை விட குறைவான நேரத்தை எடுக்கும் மற்றும் சுற்றுலா மற்றும் சர்வதேச உறவுகளை மேம்படுத்த உதவும். அப்புறம் என்ன இந்த சம்மருக்கு ஒரு பட்ஜெட் டூரை போட்டுவிட வேண்டியதுதானே. ஒரு நாட்டில் சுற்றுலாப்பயணத்தின் வாயிலாக விசா தேவையை நீக்குவதன் மூலம், அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அதனால் அந்நிய செலவாணி அதிகரிக்கும் என்பதோடு நாட்டின் பொருளாதர நிலையும் உயரும் சர்த்தார் வல்லபாய் பட்டேலின் பிரம்மாண்ட சிலை, அந்தமான் தீவு, தற்பொழுது ராமர் கோவில் இப்படி சுற்றுலாத்தலங்களைதான் வெளிநாட்டவர் பெரும்பாலும் விரும்புகின்றனர் ஆகவேதான் அரசு இப்படிப்பட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து இருக்கிறது.. என்ன இந்த சம்மருக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு கிளம்புவோமா !.

Leave A Reply

Your email address will not be published.