இந்திய ஜனநாயக கட்சி மாநில மாநாடு TAKE DIVERSION !

0

இந்திய ஜனநாயக கட்சியின் ‘தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்’ மாநில மாநாடு திருச்சி சிறுகனூர் அருகே நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இப்போக்குவரத்து மாற்றமானது 02.03.2024ம் தேதி காலை 7 மணி முதல் மாநாடு முடியும் வரை அமலில் இருக்கும் ஆகவே இந்த போக்குவரத்தை வாகன ஓட்டிகள் கவனித்து தங்கள் பயணத்தை திட்டமிடவும்./n போக்குவரத்து வழித்தட மாற்றம் : அனைத்து கனரக வாகனங்களுக்கும் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக செல்லவேண்டும்.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி வழியாக செல்லவேண்டும்.

மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், விராலிமலை வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.

சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் சென்று வரவேண்டும்.

கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.

சேலத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மேய்க்கல்நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.

சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைாபாஸ் ரோடு வழியாக குன்னம், அரியலூர், கீழப்பழூர், புள்ளம்பாடி, கொள்ளிடம் ”Y” ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பக்குடி ஜங்சன், கீரனூர் வழியாக சென்று வரவேண்டும்.

logo right

தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, வளநாடு கைகாட்டி, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும்.

தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, மணப்பாறை ரோடு, மணப்பாறை அரசுமருத்துவமனை, வையம்பட்டி வழியாக சென்று வரவேண்டும்.

அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள்…

சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் ”Y” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.

சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் ”Y” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.

மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் ”Y” ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.

திண்டுக்கலிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் ”Y” ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.

இவ்வாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அந்தந்த பாதையை கடைபிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.