இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி…
மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்த மோடிக்கு பாஜகவின் வழிநெடுகிலும் மலர் தூவி பிரம்மாண்ட வரவேற்ப்பு அளித்தனர். பின்னர் கெலே இந்தியா விழாவில் பங்கேற்றப்பின் இரவு ராஜ் பவனில் ஓய்வெடுத்தார்,
இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 09.25 மணிக்கு கிளம்புகிறார். 10.25 மணிக்கு திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தை வந்தைடையும் மோடி 10.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி ஹேலிபேட் தளத்திற்கு வருகிறார் 10.35 மணிக்கு திருச்சிராப்பள்ளி ஹெலிபேட்டில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தளத்திற்கு 10.45 மணிக்கு வருகிறார்.
அங்கிருந்து சாலை வழியாக செல்கிறார் மோடி வழியில் திரண்டு இருக்கும் மக்களை பார்த்து கையசைத்த வண்ணமும் கைகூப்பிய வண்ணமும் சென்றார்.
ரெங்கா ரெங்கா கோபுரம் அருகே அவருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலில் கிட்டத்தட்ட 11.00 மணி முதல் 12. 30 மணி வரை ஒன்றரை மணிநேரம் கோவிலில் செலவிடுகிறார். ரங்கநாத சுவாமி கோவிலில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 12.35 மணிக்கு சாலை வழியாக வந்து 12.45 மணிக்கு ஹெலிபேட் தளத்தை அடைகிறார். மதியம் ஒரு மணியளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பி
மதியம் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் ஹெலிபேட் தளத்தை அடைகிறார்.
ஹெலிபேட் தளத்தில் இருந்து சாலை வழியாக இராமேஸ்வரம் கோவிலை அடைகிறார் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் திருச்சியில் இருக்கும் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்ப்பை அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.