இன்று முதல் இவற்றில் மாற்றம் !
மார்ச் மாதம் தொடங்குகிறது. இது புதுமாசம், அதுவும் இந்த நிதியாண்டின் கடைசி மாதமாதலால் இந்த மாதம் பணக்கஷ்டம் அதிகமாக இருக்கும். பணம் மற்றும் சாதாரண மனிதனின் பாக்கெட் தொடர்பான பல மாற்றங்கள் இருக்கும், இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மார்ச் 1 முதல் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும் மனதில் கொள்ள வேண்டியவை எவை என்பதையும் தெரிந்து கொள்வோமா…
1. ஜிஎஸ்டி இ-வே பில் : GST (சரக்கு மற்றும் சேவை வரி) விதி மார்ச் 1 முதல் மாறுகிறது. ஆண்டு வருமானம் ரூபாய் 5 கோடிக்கு மேல் உள்ள வணிகங்கள் தங்கள் அனைத்து B2B பரிவர்த்தனைகளுக்கும் இ-இன்வாய்ஸ்களைச் சேர்க்காமல் இ-வே பில்களை உருவாக்க முடியாது.
2. FASTag KYC : ஃபாஸ்டாக் பயனர்களுக்கான KYC ஐ புதுப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 29ம் தேதியுடன் முடிந்தது. NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) Fastag பயனர்கள் தங்கள் KYC விவரங்களைப் புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது, இல்லையெனில், வங்கிகள் புதுப்பிக்கப்படாத Fastag கணக்குகளை செல்லாது என்று அறிவித்து அவற்றை செயலிழக்கச் செய்யும் அல்லது தடுப்புப்பட்டியலில் சேர்க்கும்.
3. எஸ்பிஐ கிரெடிட் கார்டு : பாரத ஸ்டேட் வங்கி மார்ச் முதல் தனது கிரெடிட் கார்டுகளில் குறைந்தபட்ச நாள் பில் கணக்கிடும் செயல்முறையை மாற்றியமைப்பதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி வரும் மார்ச் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இந்த தகவலை வங்கி தனது அனைத்து கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வழங்கி வருகிறது.
4. Paytm Payments Bank : Paytmன் fintech நிறுவனமான Paytm Payments வங்கியின் வங்கி வசதிகள் மூடப்படும். பிப்ரவரி 29ம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களை உள்வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.மேலும், அனைத்து டெபாசிட் மற்றும் டெபிட்-கிரெடிட் வசதிகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. பின்னர் காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5. வங்கி விடுமுறைகள் : மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறையும் உண்டு. இந்த மாதம் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். முதல் விடுமுறை மார்ச் 1ம் தேதி. ரிசர்வ் வங்கி மார்ச் 1, 8, 22, 25, 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளது. இது தவிர, மார்ச் 3, 10, 17, 24, மற்றும் 31 ஆகிய ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், மார்ச் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
6. LPG, CNG, PNG விலை : இது தவிர, இது மாதத்தின் முதல் நாள் என்பதால், எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி ஆகியவற்றின் விலைகளில் திருத்தங்களும் அறிவிக்கப்படலாம். பொதுவாக, பெட்ரோலிய நிறுவனங்கள் மாதம் முதல் தேதியில் எரிவாயு விலையை மாற்றியமைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.