இன்று : ஸ்ரீரங்கத்தில் தெப்போற்சவம்…
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் திருப்பள்ளியோடத் திருவிழா எனப்படும் தெப்போற்சவம் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று (19ம் தேதி) இரவு நடக்கவுள்ளது. இதற்கென இன்று மதியம் உற்சவர் நம்பெருமாள்மூலஸ் தானத்திலிருந்து உபயநாச்சியார் சகிதம் புறப்பட்டு மாலையில் ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத் தின் வடகரையில் உள்ள ஆஸ்தான மண்டபம் சேருவார்.
இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளியபின் தெப்போற்சவம் துவங்கும். மூன்று முறை தெப்பம் வலம் வரும். மூன்றாவது சுற்றின்போது இரவு 9.15மணியளவில் பெருமாள் தாயார் தெப்பக்குளத்தின் மையமண்டபத்தில் எழுந்தருள்வர்.
அங்கு அலங்காரம் அமுது செய்விக்கப்பட்டபின், மீண்டும் பெருமாள் தாயார்தெப்பத்தில் ஏறி சுற்றை நிறைவுசெய்தபின் கரையேறுவர், அதைத்தொடர்ந்து உபயக்காரர்கள் மரி யாதைக்குப்பின் மேற்கு மற்றும் வடக்கு வாசல் வழியாக இரவு 11.15 மணியளவில் மூர்த்திகள் மூலஸ்தானம் சேருவர். நாளை (20ம் தேதி) மாலைமீண்டும் நம்பெருமாள் புறப்பட்டு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வருவார்.
அதனைத் தொடர்ந்து இரவு ஒற்றைபிரபை வாகனத்தில் பந்தல் காட்சியுடன் பெருமாள் கோயில் திரும்புவார். அத்துடன் தெப்ப போற்சவ நிகழ்ச்சிகள் நிறைவடையும்.
வாருங்கள் கண்டு ரசிக்கலாம் அரங்கனின் அருளைப்பெறலாம் !