இன்றே இப்பொழுதே முடிக்க வேண்டிய வேலை…
நீங்கள் வழக்கமாக காரில் பயணம் செய்தால், நீங்கள் இன்னும் Fastag KYC ஐ அப்டேட் செய்யவில்லை என்றால், இப்போதே சென்று செய்யுங்கள், இல்லையெனில் அடுத்த மாதம் முதல் அபராதம் விதிக்க நேரிடும்.இப்போதைக்கு, இந்த வேலையை முடிக்க உங்களுக்கு ஜனவரி 31 வரை அவகாசம் உள்ளது. இந்த தேதிக்குள் புதுப்பிக்கப்படாவிட்டால், இந்த ஃபாஸ்டாக் வேலை செய்வதை நிறுத்திவிடும்மேலும் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஜனவரி 31ம் தேதிக்குள் ஃபாஸ்டாக் கேஒய்சி அப்டேட் செய்யப்படாவிட்டால், அனைத்து ஃபாஸ்டாக்களும் செயலிழக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Fastagன் KYC ஐ நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், அடுத்த மாதம் முதல் நீங்கள் எந்த டோல் பிளாசாவையும் கடக்கும்போது இரட்டை வரி செலுத்த வேண்டும். எந்தவொரு சுங்கச்சாவடிக்கும் 200 ரூபாய் வரி இருந்தால், நீங்கள் 400 ரூபாய் செலுத்த வேண்டும். உங்கள் Fastagன் KYC ஐ நீங்கள் புதுப்பிக்காத பொழுது உங்களுக்கும் இதுதான் நடக்கும் ஆகவே இன்றே இப்பொழுதே முடியுங்கள் நாளை நாளை என எண்ணாதே இந்நாளைய பொழுதை போக்காதே.