இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் !

0

தரமான படைப்புகள் தரும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி இணையும் அறிவுப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர்ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், சமீபத்தில் லேபிள் சீரிஸ் மூலம் சொல்லப்படாத களத்தில் அருமையான கருப்பொருளை பேசி பெரும் பாராட்டுக்களைக் குவித்தார்.

logo right

இந்நிலையில் அவர் அடுத்ததாக விஷ்ணு விஷால் உடன் இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்பொழுதே எகிறியுள்ளது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகள் தந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் விஷ்ணு விஷால். சூப்பரஸ்டார் ரஜினியுடன் இணைந்து அவர் நடித்துள்ள லால் சலாம் வெளிவரவுள்ள நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடனான அவரது கூட்டணி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.