இவர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது ! மக்கள் பணியாற்றி வரும் சிறப்பானவர்கள் !!
சென்னை, அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையம், ஏழை எளிய மக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிக குறைந்த செலவில் அரும்பாக்கத்தில் (DG வைஷ்ணவ் கல்லூரி வளாகம்) செயல்படுத்தி வருகிறது. இதன் 26ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, மக்கள் சேவையில் பணியாற்றி வரும் டாக்டர், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி பேசி, நினைவு பரிசை வழங்கினார் நடிகர் விஷால். இவர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது ! மக்கள் பணியாற்றி வரும் இவர்கள் தான் சிறப்பானவர்கள் எனக்கூறியவுடன் அரங்கில் கூடியிருந்த மாணவிகளால் அதிர்ந்தது கல்லூரி வளாகம்.
முன்னதாக விழாவிற்கு வந்த விஷாலுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது, விழா முடிந்தவுடன் விஷால் விழாவுக்கு வந்தவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார் மகிழ்வித்தார்.