‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ இன்று அமல்…
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட் டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த நவம்பர் 23ம் தேதி அறிவித்தார்.
இந்தத் திட்டம் 31ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட தாலுகாவில், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இத்தகைய முகாம் நடைபெறும் தாலுகா குறித்த தகவல், முன் கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இந்த திட்டத்தின்படி, ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல், மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தாலுகாவில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர்கள்.
அப்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், ஆட்சியர் உரிய தீர்வு காண்பர். மேலும் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக் கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்வர்கள்.
அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளை துறை அலுவலர்கள் கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி நிறைவேற்ற வழிவகை காண வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.