என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது…
மறைந்த, கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பத்மஜா வேணுகோபால் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் நமது செய்தியாளரிடம் உண்மை நிலவரம் குறித்து விசாரிக்க கேட்டோம்.
அதற்கு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனத்தெரிவித்து அவர் முகநூலில் பதிந்திருக்கும் பதிவை நமக்கு அனுப்பி வைத்தார் அதில்…பா.ஜ.க.விற்கு தாவுவதாக வலம் வரும் கருத்து குறித்து பத்மஜா வேணுகோபால் தனது முகநூலில் இட்ட பதிவு பின்வருமாறு…’நான் பா.ஜ.க.வில் சேரப் போகிறேன் என்கிற செய்தி ஏதோ ஊடகத்தில் வந்ததாக கேள்விப்பட்டேன்.
இது எங்கிருந்து வந்தது என்பது எனக்கு தெரியாது. இது குறித்து ஒரு செய்திச் சேனல் கேட்ட போதே நான் மறுத்தேன். இப்போதும் அதே நிலைபாட்டில் கடுமையாக மறுக்கிறேன்.
எதிர்காலத்தில் கட்சி தாவுவீர்களா எனக்கேட்டார்கள். அதற்கு, இன்றைய சங்கதியைத்தானே இன்று சொல்ல முடியும். நாளை நடப்பதை எப்படி இன்றே சொல்ல முடியும் என்று தமாஷாக கூறினேன். அது இப்படி திரிக்கப்படும் என எதிர் பார்க்கவே இல்லை’ என்றதோடு அந்தோணி உயிரோடு இருக்கும் போதே பா.ஜ.க.விற்கு தாவி தந்தைக்கு பெருமை சேர்த்தார் மகன் அனில் அந்தோணி. அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட்டும் வழங்கியாகிவிட்டது எனக்கூறி இருக்கிறார்.
மறைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் கருணாகரனின் மகள் மட்டும் என்ன விதிவிலக்கா..! நாளை என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்.