எழுத்தாளர் ஜெயமோகனை விளாசும் எழுத்தாளர் ராஜகம்பீரன் …
எல்லோரும் ஒரு படத்தை சிலாகித்துப் பாராட்டினால் அதற்கு எதிராக ஒரு கருத்தை சொல்லும் குணம் கொண்டவர் தான் ஜெயமோகன் என்றும் அவர் எழுத்தில் வெளியான பல படங்கள் குப்பை படங்கள் தான் எனவும் விளாசி உள்ளார்.
தன்னை எப்போதுமே லைம் லைட்டில் வைத்துக் கொள்ள இதுபோன்ற பல சர்ச்சைகளை அடிக்கடி கிளப்பிக் கொண்டே இருப்பார் ஜெயமோகன் என்றும் கூறியுள்ளார்.
மஞ்சுமெல் பாய்ஸ் குறித்து ஜெயமோகன் விமர்சனம் செய்துள்ளார் அதில் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பாரட்டினார். தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களும் பாராட்டினார்கள். ஆனால், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஒரு மலையாள பொறுக்கிகளின் படம் என கடுமையாக ஜெயமோகன் விமர்சித்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து மலையாள பொறுக்கிகள் குடித்து விட்டு கும்மாளம் போடுவதை காட்டுவதெல்லாம் ஒரு படமா? அப்படி எல்லை மீறி சென்று பலர் தடுத்தும் மதிக்காமல் குழிக்குள் விழுந்து, அந்த நபரை காப்பாற்றியவருக்கு தேசிய விருது போன்ற விருது கொடுத்ததெல்லாம் வீணான செயல் என விளாசி இருந்தார்.
சாமானிய மக்களிடம் தான் இவர் தனது கோபத்தை வெளிப்படுத்துவார். மாவு கடைக்காரனிடம் சென்று புளிச்ச மாவு கொடுத்து விட்டான் என சண்டை போட அவன் கொடுத்த அடியில் மாவுக்கட்டு போட்டு மருத்துவமனைக்கு சென்றது இவர் தான் என்றும் பணக்காரர்களின் ஏவல் ஆளாகவே இவர் இருந்து வருகிறார் என்றும் ராஜகம்பீரன் வச்சு விளாசி உள்ளார்.