ஏலகிரி மலை மேட்டுக்கனியூர் மலை கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் வழிபாடு !
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலை மேட்டுக்கனியூர் மலை கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது, இவ்விழாவில் கிராம மக்கள் சுமார் 500க்கும் பெண்கள் தட்டில் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலை வந்தடைந்ததும் 20 அடி உயரம் கொண்ட தேரை அனைவரும் சேர்ந்து இழுத்து ஓம்சக்தி பராசக்தி என கோசம் எழுப்பி சென்றனர். இந்நிகழ்ச்சியில் மயிலாட்டம், சிலம்பாட்டம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறுவதால் தான் தங்களுக்கு மழை பொழியும், விவசாயம் செழிக்கும், என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அவரவர் வேண்டுதல்கள் நிறைவேறியதால் அம்மனுக்கு கிடா வெட்டு நடைபெறுகிறது. அதேபோல குழந்தை இல்லாத தம்பதிகள் சுவாமி ஊர்வலத்தில் வணங்கி தரையில் படுத்து கொள்வார்கள் அவர்களுக்கு அம்மன் கரகம் எடுத்து வரும் பூசாரிகள் பூவெடுத்து கொடுத்து குறி சொல்கின்றனர்.
அப்படி சொல்லும் பட்சத்தில் தங்களுக்கு குழந்தை பெரும் பாக்கியம் கிடைக்கும் என்பது மலை கிராம மக்களின் ஐதீகமாக உள்ளது.