ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ! அசத்தினார் பிரதமர் மோடி !!
தேசிய தலைநகர் டெல்லியில் ஒருங்கிணைந்த வளாகமான ’கர்மயோகி பவனின்’ முதல் கட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் மிஷன் கர்மயோகியின் பல்வேறு ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.பிப்ரவரி 12ம் தேதி காலை 10.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார் என்று பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஸ்கர் மேளா நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெறும் இந்த முயற்சிக்கு ஆதரவாக மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் முழுவதும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. புதிதாக ஆள்சேர்ப்பு செய்பவர்கள் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் அரசாங்கத்தில் சேருவார்கள். வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர்கல்வித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்புத் துறை, நிதிச் சேவைத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பழங்குடியினர் நல அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் எனப் பல்வேறு பதவிகளில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஸ்கர் மேளா, நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும். ரோஸ்கர் மேளா மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கி, இளைஞர்களுக்கு அவர்களின் அதிகாரமளிப்பு மற்றும் தேசிய வளர்ச்சியில் நேரடி பங்கேற்பிற்கான ஆதாய வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் கர்மயோகி பிரரம்ப் மூலம் தங்களைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். iGOT கர்மயோகி போர்ட்டலில் உள்ள ஆன்லைன் மாட்யூலான 880க்கும் மேற்பட்ட மின்-கற்றல் படிப்புகள் ‘எங்கேயும் எந்த சாதனமும்’ கற்றல் வடிவத்திற்கு கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.