ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு பிரதமர் மோடி சூளுரை !!
குஜராத் மாநிலத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தில் பிரதான நிகழ்ச்சி நடந்தது. மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், இதில் பங்கேற்றனர். வீடியோ கான்பரன்சிங் வழியாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு திட் டங்களை துவக்கி வைத்தார். மேலும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 1.3 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது…எந்த ஒரு ஏழைக்கும், சிறந்த எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிப்பது சொந்த வீடுதான். மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ப தற்காகவே அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய தொழில்நுட்ங்களை பயன்படுத்தப்படுவதால் வீடு கட்டும் திட்டத்தின் முகமே மாறி இருக்கிறது. விரைவாக வீடுகளை கட்டி ஒப்படைப்பதை உறுதிப்படுத்த, தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்துகிறோம்.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், 25 கோடி பேர், வறுமை கோட்டிலிருந்து மீண்டுள்ளனர். இது போதாது இன்னும் பல கோடி பேர், வறுமை கோட்டிலிருந்து மீள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு வரும், அவரவர் வழியில் உதவிக்கொண்டிருக்கிறார்கள். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோர்தான், வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தூண்கள் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.