கசக்கும் சர்க்கரை உற்பத்தி அளவு …

0

சர்க்கரை உற்பத்தி பருவம் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 15ம் தேதி வரையிலான நாட்களில் நாட்டின் சர்க்கரை உற்பத்தியானது ஒரு கோடியே 48 லட்சத்து 70 ஆயிரம் டன்களாக இருந்தது என்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே பருவத்துடன் ஒப்பிடும்போது, சர்க்கரை உற்பத்தி 7 சதவிகிதம் வரை சரிவை சந்தித்துள்ளதாக இந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo right

இது தொடர்பாக கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரையிலான நாட்களில் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி ஒரு கோடியே 48 லட்சத்து 70 ஆயிரம் டன்களாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, சர்க்கரை உற்பத்தி 7 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. சர்க்கரை உற்பத்தியில் முன்னணி மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கரும்பு விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பு, சர்க்கரை உற்பத்தியின் சரிவுக்கு முக்கிய காரணமாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் மகாராஷ்டிராவின் சர்க்கரை உற்பத்தி 60 லட்சத்து 9 ஆயிரம் டன்களில் இருந்து, 51 லட்சம் டன்களாக சரிந்துள்ளது. கர்நாடகாவின் சர்க்கரை உற்பத்தி 13 சதவீதம் சரிந்து 31 லட்சம் டன்களாக உள்ளது. இதே காலகட்டத்தில் உத்திரப்பிரதேசத்தில் சர்க்கரை உற்பத்தி 15 சதவிகிதம் வளர்ச்சியுடன் 46 லட்சத்து 10 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, சர்க்கரை ஆலைக் கூட்டமைப்பினர் மத்திய அரசிடம் விடுத்த வேண்டுகோள் அடிப்படை யில் 17 லட்சம் டன் சர்க்கரையை எத்தனால் உற்பத் திக்கு அனுமதிக்க, அரசு முடிவு செய்துள்ளது. எனினும், சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள் தொடர்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.