கடன் இல்லாத பங்குகளை கண்ணை வையுங்கள்…
பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் முக்கிய துறைகளுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டு, நாட்டின் தொழில்துறை தளத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தி உள்ளன. இந்த வணிகங்களில் பெரும்பாலானவை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமானவை. பாதுகாப்பு பங்குகள் என்பது இராணுவ உபகரணங்கள் மற்றும் சேவைகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் பங்குகள் ஆகும். புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களின் பின்னணியில் முதலீட்டாளர்கள் அவற்றை கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிப்பட்ட முத்தான மூன்று பங்குகளை பார்ப்போமா..
Hindustan Aeronautics Ltd : ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்பது விமானம், ஹெலிகாப்டர்கள், ஏரோ என்ஜின்கள், ஏவியோனிக்ஸ், ஆக்சஸரீஸ் மற்றும் விண்வெளி கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்யும், பழுதுபார்க்கும், மாற்றியமைக்கும், மேம்படுத்தும் மற்றும் சேவை செய்யும் ஒரு இந்திய நிறுவனமாகும். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஒரு கடனற்ற நிறுவனமாகும், அதன் சக நிறுவனங்கலோடு ஒப்பிடும்போது குறைந்த விலை-வருமான விகிதம் 33 ஆக இருக்கிறது, ஈக்விட்டியில் 27 சதவீதம் வருமானம், 30 சதவீத மூலதனத்தின் வருவாய் மற்றும் நிகர லாப அளவு 21 சதவீதம் ஆக இருக்கிறது. இந்நிறுவனம் மல்டி பேக்கர் நிறுவனமாகவும் உள்ளது, கடந்த ஆறு மாதங்களில் பங்கு விலை 59 சதவீதமும், கடந்த ஆண்டு 145 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் நிகர வருவாய் ஆண்டுக்கு 9.5 சதவீதம் உயர்ந்துள்ளது. நிகர லாபம் ஆண்டுக்கு 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது, 2,02,500 கோடி சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது.
Bharat Dynamics Ltd : ஏவுகணைகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஒரு இந்திய நிறுவனமாகும். இந்திய ஆயுதப் படைகளும் இந்திய அரசாங்கமும் நிறுவனத்தின் பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுகின்றன. கடன் இல்லாத நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஈக்விட்டி விகிதத்தின் மீதான வருமானம் 11 சதவிகிதம் மூலதனத்தின் மீதான வருமானம் 15 சதவிகிதம் மற்றும் நிகர லாப அளவு 14 சதவிகிதமாக இருக்கிறது. ரூபாய் 31,370 கோடி சந்தை மூலதனத்துடன், இது ஒரு மிட்கேப் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் 47 சதவிகிதம் மற்றும் கடந்த ஆண்டு 86 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நிகர லாபம் 2 சதவிகிதம் ஆண்டுக்கு அதிகரித்து, Q2FY23ல் ரூபாய் 76 கோடியிலிருந்து Q2FY24ல் ரூபாய் 147 கோடியாக உயர்ந்துள்ளது.
Bharat Electronics Ltd : பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், 1954ல் நிறுவப்பட்டது, பாதுகாப்புத் துறைக்கான மின்னணு உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை தயாரித்து வழங்குகிறது. இந்நிறுவனம் சிவில் சந்தையில் வரையறுக்கப்பட்ட இருப்பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனமும் கடனற்றது, அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது குறைந்த விலை-வருமான விகிதம் 41, ஈக்விட்டி மீதான வருமானம் 22 சதவிகிதம் மூலதனத்தின் மீதான வருமானம் 27 சதவிகிதம் மற்றும் நிகர லாப வரம்பு 16 சதவிகிதத்தை கொண்டுள்ளது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஒரு லார்ஜ் கேப் நிறுவனமாகும், இதன் சந்தை மூலதனம் ரூபாய் 1,40,000 கோடியாக இருக்கிறது. நிகர லாபம் ஆண்டுக்கு 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது.