கடன் இல்லாத பங்குகள் 46 சதவிகிதம்வரை தள்ளுபடியில் !

0

கடந்த திங்கட்கிழமை முதலே, இந்தியப் பங்குச் சந்தை வயிற்றில் புளியைக்கரைத்து வருகிறது. பெரும்பாலான துறை குறியீடுகள் குறைந்தே முடிவடைந்தன. தற்போது தீவிர விற்பனை அழுத்தத்தில் இருக்கும் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் குறியீடுகளில் இந்த விற்பனைக் களம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடன் இல்லாத மூன்று பங்குகள் தற்சமயம் 52 வார உச்சத்திலிருந்து ஒவ்வொன்றும் 25 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடியில் வர்த்தகமாகி வருகின்றன அந்த பங்குகளை பார்ப்போமா…

Bhansali Engineering Polymers Limited : சந்தை மூலதனம் ரூபாய் 2,167.5 கோடிகள், நிறுவனத்தின் பங்கு விலை BSE ல் 0.87 சதவிகிதம் உயர்ந்து வெள்ளிக்கிழமை நிறைவு செய்தது. பன்சாலி இன்ஜினியரிங் பாலிமர்ஸ் லிமிடெட் (பிஇபிஎல்) பங்கு விலை அதன் 52 வார உச்சத்தை ஜனவரி 2024 அன்று ரூபாய் 118, மற்றும் தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிடும் போது, சுமார் 24.6 சதவீதம் தள்ளுபடி உள்ளது.

நிறுவனத்தின் நிகர லாபம் 16.6 சதவிகிதம் QoQ சரிந்து ரூபாய் 48 கோடியில் இருந்து FY23-24ல் ரூபாய் 40 கோடி ரூபாயில் இருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் 7 சதவிகிதம் குறைந்துள்ளது 1984ல் இணைக்கப்பட்ட, BEPL ஆனது அக்ரிலோனிட்ரைல் புடடைன் ஸ்டைரீனை (ABS) உற்பத்தி செய்கிறது மற்றும் இந்திய சந்தையில் ABS ரெசின்கள், AES ரெசின்கள், ASA ரெசின்கள் மற்றும் அவற்றின் கலவைகளை மற்ற பிளாஸ்டிக்குகளுடன் விற்பனை செய்கிறது.

Hathway Cable & Datacom Limited : நேற்றைய வர்த்தக அமர்வில் நிறுவனத்தின் பங்கின் விலை 0.74 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 20.35ல் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சந்தை மூலதனம் ரூ. 3,589.7 கோடியாக இருக்கிறது. பங்கு விலை அதன் 52 வார அதிகபட்சமான பிப்ரவரி 2024ல் ரூபாய் 27.95, மற்றும் தற்போதைய பங்கு விலையுடன் ஒப்பிடும் போது, சுமார் 25.36 சதவீதம் தள்ளுபடி உள்ளது.

logo right

காலாண்டு அடிப்படையில், நிறுவனம் நிகர லாபத்தில் 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. Q2 FY23-24ல் 20 கோடியாக இருந்து Q3 FY23-24ல் ரூபாய் 22 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 4.33 சதவீதம் அதிகரித்துள்ளது. 23-24 நிதியாண்டில் 484 கோடி ரூபாய். Q3 FY23-24ல் 505 கோடியாக இருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களில் சுமார் 12.15 சதவீதமும், கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 41.96 சதவீதமும் நேர்மறை வருமானத்தை அளித்துள்ளது. இருப்பினும், இதுவரை, நிறுவனம் 2024ல் 6.24 சதவீத எதிர்மறை வருமானத்தை வழங்கியுள்ளது. ஹாத்வே கேபிள் & டேட்டாகாம் லிமிடெட் இந்தியாவில் உள்ள முன்னணி கேபிள் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒன்றாகும், மேலும் நிறுவனத்தின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய மல்டிசிஸ்டம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஹாத்வே டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட் மூலம் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்குகிறது.

Blue Cloud Softech Solutions Limited : கணினி மென்பொருள் மற்றும் சந்தைப்படுத்தல், தரவு செயலாக்க சேவைகள் ஆகியவற்றை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூபாய் 1,162.4 கோடிகள், நிறுவனத்தின் பங்கு விலை பிஎஸ்இயில் கிட்டத்தட்ட 5.15 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 54.50க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ப்ளூ கிளவுட் பங்குகள் ஏப்ரல் 2023ல் 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூபாய் 98.93, தற்போதைய சந்தை விலையில் இருந்து சுமார் 45.41 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. நிறுவனத்தின் நிகர லாபம் 18.1 சதவிகிதம் அதிகரித்து Q3 FY23-24ல் ரூபாய் 0.91 கோடியிலிருந்து 23-24 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூபாய 0.77 கோடியாக குறைந்தது, செயல்பாடுகளின் வருவாய் வளர்ச்சி 36.7 சதவிகிதமாக இருந்தது. நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 12.6 சதவிகிதம் எதிர்மறையான வருமானத்தை அளித்துள்ளது, 2024ல் இதுவரை 8.6 சதவிகிதம். இருப்பினும், கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 72.9 சதவிகிதம் நேர்மறை வருமானத்தை வழங்கியுள்ளது.

Disclimer : மேலே உள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது தரகு நிறுவனங்களின் கருத்துக்களே முதலீட்டாளர்கள் உங்கள் ஆலோசகரை ஆலோசிக்கவும்.

Leave A Reply

Your email address will not be published.