கண்டா வர சொல்லுங்க போஸ்டருக்கு பதிலடி கொடுத்த தருமபுரி எம்பி செந்தில்குமார் !
தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் பிரபல அரசியல்கட்சியினா் அந்தந்த தொகுதிகளில் ஒட்டியிருந்தனா் . இந்த போஸ்டா் தமிழகத்தில் பேசும் பொருளாக மாறியது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தருமபுரி .மேட்டூர். அரூர். பாப்பிரெட்டிப்பட்டி .பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் கண்டா வர சொல்லுங்க போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.போஸ்டருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆதரவாளர்கள் கண்டா வரச் சொல்லுங்க ? எனக் குறிப்பிட்டு மக்களுக்கான நிதியை கையோடு வாங்கித் தந்திருக்காங்க என பதிவிட்டு ஒகேனக்கல் காவிரி கூட்டுகுடிநீா் திட்டத்திற்கு 7, 890 கோடி. ஜிட்டாண்டஹள்ளி தருமபுரி நான்கு வழி சாலைக்கு 899 கோடி. தொப்பூர் கணவாய் உயர் மட்ட சாலை திட்டத்திற்கு 775 கோடி. 75 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று அனைத்து மலைப்பகுதிகளுக்கும் சாலை வசதி செய்ய 173 கோடி . பள்ளிப்பட்டி மஞ்சவாடி தேசிய நெடுஞ்சாலை 170 கோடி .ஓசூர் ஓமலூர் வரை இரட்டை ரயில் பாதை திட்டம் 100 கோடி .மொரப்பூர் தருமபுரி ரயில் திட்டத்திற்கு 100 கோடி. தொப்பூர் பவானி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு 100 கோடி என பதிவிட்டு எங்கள் எம்பி எங்களோடு தான் இருக்கிறார்.தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் எனக் குறிப்பிட்டு நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர் சபாஷ் சரியான போட்டி என இதனை மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்கின்றனர்.