கண்ணமங்கலத்தில் கண்ணம் வைத்த வடமாநில பெண்களை அமுக்கிய காவல்துறை !

0

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பஜார் பகுதியில் முத்துக்குமரன் என்பவருடைய சோமு ஜுவல்லரி என்ற நகைக்கடை உள்ளது இந்த கடையில் கடந்த மாதம் மூன்று பெண்கள் தங்க முலாம் பூசப்பட்ட 10 சவரன் நகைகளை அடகு வைத்து அதற்கு பதிலாக ஒரிஜினல் 10 சவரன் தங்க நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு கடை உரிமையாளர் முத்துக்குமரன் அந்த பெண்கள் கொடுத்த 10 சவரன் நகை போலி என்று தெரிந்தவுடன் கடையின் சிசிடிவி காட்சிகளை வைத்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அது மட்டுமல்லாமல் சோமு ஜூல்வர்ஸ் உரிமையாளர் முத்துக்குமரன் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை விற்பனையாளர் சங்கத்திடம் அந்த சிசிடிவி காட்சிகளை அனுப்பி வைத்து போலி நகைகளை விற்பனை செய்த மூன்று பெண்கள் நகை கடைகளுக்கு வந்தால் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

logo right

இதையடுத்து நேற்று வேலூர் டவுன் பாகாயம் பகுதியில் அந்த மூன்று பெண்கள் வேறொரு நகைக்கடையில் இதே போன்று போலி தங்க நகைகளை விற்பனை செய்ய சென்றுள்ளனர் அந்தக் கடையின் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் விரைந்து சென்று அந்த மூன்று பெண்களை கைது செய்தனர்

கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது உத்திரபிரதேச மாநிலம் ரத்தனபுறா பகுதியைச் சேர்ந்த ரீட்டாதேவி ராணிதேவி சீதாசவிதா ஆகிய மூன்று பெண்கள் என்று தெரியவந்தது. இதற்கு முன்பாக கண்ணமங்கலம், போளூர், வேலூர் ஆகிய பகுதிகளில் இது போன்று பல்வேறு நகைக் கடைகளில் முலாம் பூசிய போலி தங்க நகைகளை விற்றது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் மூன்று பெண்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகளை மீட்டு கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.