கனிமொழி : தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாதது ஏன் ?
திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையில் நிருபர்களிடம் நேற்று பேசும் பொழுது, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிக்கை தயாரிப்புக்காக துாத்துக்குடியில் தொடங்கி, தமிழகத்தின் பல முக்கிய நக ரங்களில் பல துறையினரை சந்தித்து, அவர்களது கருத்துக்களை கேட்டு பதிவு செய்து வருகிறோம். இந்தக்கருத்துக்களை முதல்வரிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்று விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
தமிழகத்தில் உள்ள தொழிற்துறையினர், குறிப்பாக சிறு, குறுந்தொழிலில் இருப்பவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி குளறுபடி மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டனர். மின்கட்டண உயர்வு தொடர்பாக தொழிற்துறையினருடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்களது கோரிக்கைகளை ஒரே நேரத்தில் சரி செய்ய முடியாத சூழல் உள்ளதை தெரிவித்துள்ளோம்.
விரைவில் இதற்கான தீர்வு காணப்படும். மின்கட்டண உயர்வு பிரச்னை தேர்தல் அறிக்கையில் இடம்பெறுமா என்பது குறித்து நான் தெரிவிக்க முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் முன்வைக்கும் அனைத்தையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்காததும், பாரபட்சமாக நிதியை குறைத்து கொடுத்ததும் தான் காரணம் என்றார்.
நல்லவேளை நாடாளுமன்ற வாக்குறுதி சரி சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி என எவரும் கேட்கவில்லை.