கருணை காட்டுவார்களா காவல் ஆணையரும் மேயரும் !
கருணை காட்டுவார்களா காவல் ஆணையரும் மேயரும் ! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை வசதிகளையும் மக்கள் நலங்களையும் மேமப்டுத்துவதில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 1994ல் உதயமானது. புதியதாக தொடங்கப்பட்ட மாநகராட்சியில் 45 வார்டுகள் இருந்த நிலையில் மாநகராட்சியை ஒட்டியுள்ள துவாக்குடி, திருவெறும்பூர் நகராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனடிப்படையில் இந்த மாநகராட்சி நான்கு மிகப்பெரிய மண்டலங்களையும் நூறு (100) வார்டுகளையும் கொண்டதாக வரும் காலங்களில் விஸ்வரூபம் எடுக்க உள்ளது. தமிழகத்தில் சென்னை கோவைக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய மாநகராட்சியாக உருவெடுக்க உள்ளது. இந்நிலையில் திருச்சி காவல் ஆணையராக திரிபாதி பணிபுரிந்தபோது ‘கம்யூனிட்டி போலீசிங்’ எனப்படும் பொதுமக்களுடன் சேர்ந்து பணியாற்றும் உத்தியை காவல்துறையில் அறிமுகப்படுத்தினார். இதற்காக வார்டுக்கு ஒன்று வீதம் 45 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன அத்துடன் ரோந்து காவல் படை, குடிசைப்பகுதிகளை தத்து எடுக்கும் திட்டம் மற்றும் புகார் பெட்டி திட்டம் போன்ற புதிய திட்டங்களை காவல்துறையில் அறிமுகப்படுத்தினார். பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவதே இந்தத் திட்டங்களின் சாராம்சமாக விளங்கியது. திரிபாதியின் இந்தத் தொலைநோக்குப் பார்வை திட்டங்கள் தான் இன்று தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது என்றே கூறலாம். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதைப்போல திரிபாதி கொண்டு வந்த காவல் உதவி மையங்களில் பெரும்பாலானவை தற்பொழுது பூட்டி வைக்கப்பட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான உதவி மையங்களில் போதிய காவலர்கள் இல்லாததால் பூட்டியே கிடக்கின்றன. தற்பொழுது மாநகராட்சி விரிவடைய உள்ள நிலையில் அனைத்து காவல் உதவி மையங்களையும் இருபிரிவினர் அதாவது காலை மாமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் அலுவலகமாகவும் இரவில் காவலர்கள் பயன்படுத்தும் உதவி மையங்களாகவும் பயன்படுத்தினால் பெரும்பாலான குற்றச்செயல்கள் தவிக்கப்படுவதுடன், காவலர்களுக்கும் மக்களுக்குமான உறவு பலப்பட்டு குற்றநடவடிக்கைகள் உடனடியாக காவல்துறையினரை சென்றடையும் என மக்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். திருச்சி, மாநிலத்தின் மத்தியில் இருப்பதால் திருச்சியை மாநிலத்தின் தலைநகராக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை பல நெடுங்காலமாக இருந்து வரும் நிலையில் அது நடப்பதாகத்தெரியவில்லை ஆனால் இது மக்களின் தேவை ஆக கூடிய விரைவில் நல்லதே நடக்கு அதற்கான காவல் ஆணையர் காமினியும் மேயர் அன்பழகனும் என நம்புவோமாக !.