கரூரில் ஆறு சிறிய ஜவுளி பூங்கா !!
தமிழகத்தில் சிறிய அள விலான ஜவுளிப் பூங்கா திட்டம் 2015ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. திட்ட வழிமுறைகளில் இருந்த இடர்பாடுகள் கார ணமாக யாரும் ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரவில்லை, இதையடுத்து நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு உத் தரவிட்டது.
இதன்படி, 2 ஏக்கர் நிலத்தில் குறைந்தபட்சம் 3 உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும். இதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் அமைக்க தகுதியான திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் (அதிகபட்சம் 5.2.50 கோடி) மானியமாக தமிழக அரசு வழங்கும். இதையடுத்து சிறிய அளவிலான ஜவுளிப்பூங் காக்களை அமைக்க ஜவுளி தொழில்முனைவோர் ஆர் வத்துடன் முன்வந்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், கரூர் விஎம்டி மினிடெக்ஸ் டைல் பார்க், கரூர் ஸ்ரீ பிரனவ் மினிடெக்ஸ்டைல் பார்க், கரூர் நாச்சி மினி டெக்ஸ்டைல் பார்க் உள் ளிட்ட 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு, திட்ட செயலாக்கத்துக்கான மொத்த மானியத் தொகையான ரூபாய் 13.75 கோடியில், முதற்கட்டமாக, திட்ட உத்தரவு ரூபாய் 5 கோடி வழங்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில், இவற்றை மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், தலைமைச் செயகத்தில் நேற்று நடந்த 5 நிறுவனங்களுக்கு மானியம் ரூபாய் 5.33 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இவ்விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.