காசு… பணம்… துட்டு… கட்சி ! கம்பெனி !!
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2019ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நம் நாட்டைச் சேர்ந்த தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவ னங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும். எனக்கூறப்பட்டது. இத்திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்கள், பொதுத்துறை வங்கியான, தேசிய வங்கியான எஸ் பி.ஐயில் மட்டுமே கிடைக்கும் எனத்தெரிவிக்கப்பட்டது, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளிலும் விற்கப்பட்டன.
இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ,உச்சநீதி மன்றம் ‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக, அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது’ என, கடந்த மாதம், 15ம் தேதி தீர்ப்பளித்தது.கட்சிகள் பெற்ற நன்கொடைகளை 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை வெளியிடப்பட்ட ரூபாய் 16 ஆயிரத்து 518 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பற்றிய விபரங்களை தேர் தல் கமிஷனிடம் எஸ்பிஐ ஒப்படைத்தது. அந்த விபரங்களை இணையதளத்தில் தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
தேர்தல் ஆணைய தகவல்களின் படி தேர்தல் பத்திரங்களாக கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. பாஜக ரூபாய் 6,060 கோடி, திரிணாமுல் ரூபாய் 1,609 கோடி, காங்கிரஸ் ரூபாய் 1,421 கோடி, பாரத் ராஷ்டிர சமிதி ரூபாய் 1,215 கோடி, பிஜு ஜனதா தளம் ரூபாய் 776 கோடி அதில மேலும் சில கட்சிகளான, திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார் பற்ற ஜனதா தளம், தேசியவாத காங் கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ் வாடி கட்சிகளும் நன்கொடைகளாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றிருப்பது தெரிவந்தது.
அதிக நன்கொடை கொடுத்த நிறுவனங்கள் பற்றிய விபரமும் தெரிய வந்திருக்கிறது அதில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் அண்டு ஓட்டல் ரூபாய் 1,368 கோடி மேகா இன்ஜினியரிங் அண்டு இன்ப்ராஸ்டிரக்சர் ரூபாய் 966 கோடி குவிக் சப்ளை செயின் ரூபாய் 410 கோடி வேதாந்தா நிறுவனம் ரூபாய் 400 கோடி ஹல்டியா எனர்ஜி ரூபாய் 247 கோடி பார்தி குழுமம் ரூபாய் 247 கோடி எஸ்சல் மைனிங் இண்டஸ்ட்ரீஸ் ரூபாய் 224 கோடி வெஸ்டர்ன் உ.பி. பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி ரூபாய் 220 கோடி ரூபாய் 195 கோடி, கேவண்டர் புட்பார்க் இன்ப்ரா மதன்லால் நிறுவனம் ரூபாய் 185 கோடி வழங்கியுள்ளன.
ஆக ஆக ஒன்று கட்சி நடத்த வேண்டும் அல்லது சாமியாராகிவிடவேண்டும் இதில் எது உங்களுக்கு பொறுத்தமாக இருக்கும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் தொழில் செய்து பணக்காரர் ஆகலாம் என்றாலும்கூட உழைத்த பணத்தை கட்சிகளுக்கு நிதியாக தரவேண்டும் ஆக ஆக…